சமூக மாற்றத்தின் அடையாளமான Dr.அம்பேத்கர் ஓர் அறிமுகம்:
தனது அறிவையும், வாசிப்பையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்திய மாமேதை. இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தவர் உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்காவிற்கு சென்ற முதல் இந்தியர் ஆவார் இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக் குழுவின் தலைவர் இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர். அரசியலமைப்புச் சட்டம் , பொருளாதாரம் , சமூகச் சீர்திருத்தம், பெண்கள் , குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு , தேர்தல் சீர்திருத்தங்கள் தொழிலாளர் நலன் , விவசாயம் , மின்சார உற்பத்தி , வெளியுறவுக் கொள்கை என ஒரு தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான அனைத்திலும் பங்களிப்பு செய்திருக்கிறார்..!
பிச்சனத்தம் கிராமமானது ஆலத்தூர் மற்றும் மூரார்பாளையம் ஆகிய ஊர்களுக்கு இடையே கிழக்கு திசையில் 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு அழகான சிறு கிராமமாகும். இயற்கை சூழ்ந்தும், எழில் நிறைந்தும் காணப்படும் இக்கிராமத்தில் 1௦௦௦-க்கும் அதிகமானோர் வசித்துவருகின்றனர். மேலும் இக்கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக செய்யப்படுகிறது.
சுமார் 35௦- க்கும் அதிகமான குடும்பங்கள் வாழும் இப்பகுதியில் மழை நாட்கள் வந்தாலே தெருக்கள் மற்றும் சாலைகள் அலங்கோலமாக காணப்படும். காரணம் மழை காலங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாததாலும், பள்ளம் மேடாக காணப்படும் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றும் சேரும், சகதியுமாக காட்சியளிக்கும்.
என்றாலும் சில ஆண்டுகளாக இதனை சீரமைக்க அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் முன் வராத நிலையில், இதே கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மழை நீரால் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணியை ஒரு இயக்கமாக ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானித்த சில மூத்த இளைஞர்கள். வாலிபர்களை ஓன்று திரட்டி ஒரு whatsapp - குழு ஒன்றை ஆரம்பித்தனர், அக்குழுவிற்கு அண்ணல் Dr. அம்பேத்கர் இயக்கம் என்று பெயர் சூட்டினர்.பின்பு தனது கிராமத்தில் இருக்கும் குறைகளை தாமாகவே சரி செய்வதுபற்றி விளக்கம் கொடுத்து, அத்தேவைக்கான தொகையையும் சேகரித்தனர். பின்னர் மூன்று இளைஞர்களின் தலைமையில் சாலை சீரமைப்புப்பணி 23.11.2021 செவ்வாய் கிழமை அன்று தொடங்கப்பட்டு சரியான முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பது பாராட்டுக்குரியது.
மாற்றத்தின் அடையாளமும், சட்ட மேதையுமான மாண்புமிகு அண்ணல் Dr. அம்பேத்கர் அவர்கள்மேல் உள்ள மதிப்பின் ஒரு சிறந்த அடையாளமே இக்கிராமத்து இளைஞர்களின் ஒற்றுமைக்கு காரணம் என்று இந்த இயக்கத்தின் மூத்த சகோதரர்கள் தெரிவித்தனர். மேலும் எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல் தனது ஊருக்கு செய்த இந்த சிறிய பணி தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து இதுபோல பல நற்பணிகளை எங்கள் Dr.அம்பேத்கர் இயக்கத்தில் இணைந்துள்ள இளைஞர்களை கொண்டு தொடர்ந்து செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
பிச்சனத்தம் கிராமத்தின் இளைஞர்களால் தொடங்கப்பட்டு நற்பணிகளை செய்துவரும் Dr.அம்பேத்கர் இயக்கமானது. அரசியலையும், அதிகாரத்தையும் நம்பியிருக்கும் அருகிலுள்ள கிராமங்களுக்கும், அக்கிராமத்தின் இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை ..!
எனது மாற்றமே சமுதாயத்தின் மாற்றம் ..!
- டாக்டர் அம்பேத்கர்.
1 Comments
WOWW SUPER NANBARGALE
ReplyDelete