இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

போதை பொருட்கள் விற்ற 3 பெண்கள் கைது

தியாகதுருகம், டிச.6: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடையில் போதை பொருட்கள் விற்பதாக தியாகதுருகம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது பழனி மனைவி விஜயா (எ) வசந்தி, சரவணன் மனைவி சங்கீதா, வெங்கடேசன் மனைவி உஷா ஆகியோர் போதை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து தியாகதுருகம் சந்தைமேடு பகுதியில் 330 ஹான்ஸ் பாக்கெட், 111 கூல் லிப் பாக்கெட், 36 சைனி ஹைனி பாக்கெட், 110 டோபாக்கோ பாக்கெட், 110 விமல் பாக் என  மொத்தம் 818 பாக்கெட் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் விஜயா என்பவர் பெங்களூரில் இருந்து போதை பொருட்கள் வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து  3 பெண்களை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.



from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/3prdOoV

Post a Comment

0 Comments