இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

மின் ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டுண

சின்னசேலம், டிச. 16: சின்னசேலம் அருகே எரவார் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனிமுத்து(54). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் கன்னியம்மாள் தனக்கு சொந்தமான நிலத்தில் வேலை செய்து வந்தார். அப்போது சுமார் 2.30 மணியளவில் ஸ்கூட்டியில் வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கன்னியம்மாளிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர் வயலில் இருந்து கொண்டே தொட்டியில் குடித்து விட்டு செல்லுங்கள் என்று கூறி உள்ளார். அப்போது அந்த பெண் வீட்டில் நுழைந்து பீரோவில் இருந்த தாலி செயின், தோடு, மோதிரம், தங்க காசு உள்ளிட்ட 7 பவுன் நகை மற்றும் ரூ.8000 பணத்தை திருடி சென்றுள்ளார். இந்நிலையில் கன்னியம்மாள் வயலில் வேலை முடிந்து மாலை வீடு திரும்பி உள்ளார். அப்போது பீரோவில் இருந்த துணிகள் கலைந்து இருப்பதை கண்டு திடுக்கிட்டு நகைகளை பார்த்துள்ளார். அதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் திருடு போனது தெரிய வந்தது. இந்த திருட்டு சம்பவம்  குறித்து கன்னியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |16 Dec 2021 https://ift.tt/33yHLfD

Post a Comment

0 Comments