பண்ருட்டி, டிச.11: பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நடந்தது. புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் நந்தகுமார் கலந்துகொண்டு ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவிகளும் படிக்கும் காலம்தான் பொற்காலம் ஆகும். இதில் எவ்வித தீய பழக்கத்திற்கும் ஆளாக கூடாது. போதை பொருட்கள் மூலம் அடிமையானால் பல்வேறு தீமைகள் ஏற்பட்டு வாழ்க்கையே நாசமாகிவிடும். எனவே இப்பள்ளியில் படித்த ஏராளமான மாணவர்கள் தற்போது காவல்துறையில் உயரதிகாரிகள், பத்திரிகையாளர், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ளனர். இதே பகுதியில் மூன்று மாணவர்கள் ஐஏஎஸ் படித்து தற்போது பயிற்சியில் உள்ளது பெருமைபட வேண்டிய விஷயமாகும். எனவே மாணவர்கள் உயர்ந்த பதவிகளை அடைய கடுமையாக படித்து முன்னேற வேண்டும். எவ்வித போதை பழக்கத்திற்கும் ஆளாககூடாது என கூறினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் மேல்நிலை பள்ளியில் காவல்துறை சார்பில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கும் விழிப்புணர்வு கூட்டம் தலைமை ஆசிரியர் ஆனந்த பாஸ்கரன் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் அசோகன் மாணவர்களிடம் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், போலீசார் கலந்துகொண்டனர்.
from Dinakaran.com |11 Dec 2021 https://ift.tt/3lTxEbC
0 Comments