இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

மாணவரிடம் செல்போன் பறித்த பைக் ஆசாமிகளுக்கு வலை

விழுப்புரம், டிச. 3:  விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ரஸ்கின் ஜோசப்  மகன் டார்வின்(21). இவர் கெங்கராம்பாளையத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழுதரெட்டி எல்லீஸ்சத்திரம் ரோட்டில் செல்போன் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், டார்வினின் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மாணவனின் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.



from Dinakaran.com |03 Dec 2021 https://ift.tt/32UqBJ4

Post a Comment

0 Comments