இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

நூறுநாள் திட்டத்தில் வேலை வழங்க கோரி சாலை மறியல்

சேத்தியாத்தோப்பு, டிச. 24:கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் இடையன்பால்செரி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் நூறுநாள் வேலை வழங்கவில்லை என்று கூறி சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இடையன்பால்செரி கிராமத்தை சேர்ந்த 10 பேருக்கு மட்டுமே வேலை வழங்குவோம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனை நாங்கள் ஏற்காமல் அனைவருக்கும் வேலை வழங்க கோரி சாலை மறியல் செய்தோம் என்று தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் எவ்விதமான வாழ்வாதார பாதுகாப்பு இல்லாத நிலையில், எங்களுக்கு நூறுநாள் வேலை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். எனவே நூறு நாள் திட்டத்தில் அனைவருக்கும் வேலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.



from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/32nA5wj

Post a Comment

0 Comments