முஷ்ணம், டிச. 16: முஷ்ணம் அருகே பேரூர், கொழை ஊராட்சிகளில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ஆய்வு செய்தார். பேரூர் ஊராட்சியில் ஜெ.ஜெ.எம் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பைப்லைன் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குடிநீரில் குளோரினேஷன் அளவு தன்மை குறித்து பரிசோதனை மேற்கொண்டார். இதனையடுத்து கொழை ஊராட்சிக்கு சென்று பார்வையிட்டார். முஷ்ணம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், ஒன்றிய உதவி பொறியாளர் அனுசுயா, பணி மேற்பார்வையாளர் லதா, பேரூர் ஊராட்சி மன்ற தலைவி கலாவதி சுப்ரமணியன், ஊராட்சி செயலர் நாகராஜ், கொழை ஊராட்சி மன்ற தலைவி பிரேமா இளையராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
from Dinakaran.com |16 Dec 2021 https://ift.tt/33CSW7b
0 Comments