இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

கடலூர், டிச. 9: கடலூர் முதுநகர் சிவானந்தபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் மேற்கொள்ளும் வகையில் இலவச கண் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ முகாமை துவக்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை சரத் தினகரன் செய்திருந்தார். மருத்துவர் பிரவீன் ஐயப்பன் மற்றும் சுகாதார துறை மருத்துவர் குழு தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், சன் பிரைட் பிரகாஷ், அரிமா ராஜா, தம்புராஜ், நாகராஜ், ராஜேந்திரன், தில்லை ராஜன், கண்ணன், முருகானந்தம், அன்பு,  தீபக், ராஜன், மனோஜ், மருதன், எல்சா, மீனா, முத்துலட்சுமி, தமிழ்வாணன், சரவணன், தமிழரசன், பிரேம், திருஞானசம்பந்தம், சுதாகர், ஸ்டாலின், சேது ராஜா, சுமன், சதீஷ், ரவீந்திரன், பாலா, விக்னேஷ், அஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



from Dinakaran.com |09 Dec 2021 https://ift.tt/3lMMtfZ

Post a Comment

0 Comments