விழுப்புரம், டிச. 4: விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த சங்கரநாதன்(36). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி 8 வருடமாகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சங்கரநாதன் பேரங்கியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் வீட்டில் உள்ளவர்களை பய முறுத்துவதற்காக அடிக்கடி பூச்சி மருந்து குடித்து இறந்துவிடுவேன் என்று கூறிவந்தாராம். நேற்று முன்தினம் இதேபோல் கூறிவிட்டு பூச்சி மருந்தை குடித்துள்ளார். மயங்கி விழுந்து அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இதேபோல் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |04 Dec 2021 https://ift.tt/3rzwBkM
0 Comments