இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு முன்னாள் சிறப்பு டிஜிபியின் டிரைவர் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம்

விழுப்புரம், டிச. 5: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபியின் டிரைவர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியில், பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின்பேரின், தமிழக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. சாட்சிகள் விசாரணை தொடங்கி நடந்துவரும் நிலையில், நேற்று நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு டிஜிபி நேரில் ஆஜரானார். எஸ்பி கண்ணன் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி மனுதாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து சாட்சி விசாரணை நடந்தது. 6வது சாட்சியாக சேர்க்கப்பட்ட, முன்னாள் சிறப்பு டிஜிபியின் கார் டிரைவரான சென்னை ஆயுதப்படை போலீஸ்காரரும், தற்போது நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல்நிலைய போலீஸ்காரருமான ராமராஜன் நேரில் ஆஜராகி சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக சாட்சியம் அளித்தார். இதனை நீதிபதி கோபிநாதன் பதிவு செய்துகொண்டார். ெதாடர்ந்து வரும் 7ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் 2வது சாட்சியான பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கணவரும், அருணாச்சல பிரதேசத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிவரும் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் 7வது சாட்சியான அப்போதைய பெரம்பலூர் மாவட்ட கூடுதல் எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க, இருவருக்கும் சம்மன் அனுப்பும்படி சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.



from Dinakaran.com |05 Dec 2021 https://ift.tt/3Im5vDC

Post a Comment

0 Comments