இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

கார் மோதி குழந்தை பலி

சேத்தியாத்தோப்பு, டிச. 7: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எறும்பூர் கிராமத்தின் காமராஜர் நகரை சேர்ந்த செல்வசேகர் மகள் சிவன்யா (4).மணக்காடு அங்கன்வாடியில் படித்து வந்தார். நேற்று மதியம் வீட்டிலிருந்து கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு  வருவதற்கு சாலையின் வலதுபுறம் வரும்போது விருத்தாசலம் - புவனகிரி சாலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்த கார் இடதுபுறம் செல்லாமல் ரோட்டின் வலதுபுறமாக ஏறி வந்தபோது குழந்தை மீது மோதியது. இதில் குழந்தை சிவன்யாவிற்கு தலை மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை மீட்டு விபத்து ஏற்படுத்திய காரிலேயே சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.



from Dinakaran.com |08 Dec 2021 https://ift.tt/3IuSyYk

Post a Comment

0 Comments