சிதம்பரம், டிச. 24: சிதம்பரம் நகரில் உள்ள மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இயக்குனர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயக்கொடி வரவேற்றார். சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் கன்னிச்சாமி பங்கேற்று, நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி ஒமிக்ரான் நோய் தொற்று குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இந்த நோய்த்தொற்று வருவதற்கான அறிகுறிகளை கண்டறிதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்படி எடுப்பது என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மாவட்ட கல்வி அலுவலர் விளக்கிக் கூறினார். பின்னர் மாணவர் மனசு என்னும் புகார் பெட்டியையும் அறிமுகம் செய்து வைத்தார். இதில் மாணவர்கள் தங்களது நிறை, குறைகளை தெரிவிக்கலாம் எனவும் எடுத்துரைத்தார். ஆசிரியர்கள் ரமா, அனுராதா, பிரான்சிஸ் சேவியர், இலக்கியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/30Xwe8I
0 Comments