இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

ஊராட்சி நடுநிலை பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

பண்ருட்டி, டிச. 9:  பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் கலையரசிசேதுராஜன் மற்றும் பொதுமக்கள், மாவட்ட கல்வித்துறைக்கு கோரிக்கை மனு விடுத்திருந்தனர். அதன் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவது தொடர்பான கருத்துகளை கேட்டறிந்தனர். உதவி கல்வி அலுவலர் இளஞ்செழியன், தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.



from Dinakaran.com |09 Dec 2021 https://ift.tt/3DEnEJ4

Post a Comment

0 Comments