இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

எச்சரித்தும் அலட்சியப்போக்கு பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் விபரீத பயணம்

சேத்தியாத்தோப்பு, டிச. 24: சேத்தியாத்தோப்பு பேருந்து நிலைய பகுதி 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் மைய பகுதியாக உள்ளது. சிதம்பரம் அருகே சி. முட்லூர் பகுதியில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த கல்லூரிக்கு மாணவர்கள் அரசு ேபருந்தில் சென்று வருகின்றனர். மேலும், சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசு பேருந்தில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று அரசு பேருந்தில், தொங்கியவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். பேருந்து நடத்துனர் மாணவர்களை எச்சரித்துள்ளார். ஆனால் அதனை மாணவர்கள் கண்டுகொள்ளாமல், தொங்கியபடி சென்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் பேருந்திலிருந்து மாணவர் ஒருவர் விழுந்து உயிர் தப்பித்த நிகழ்வும் நடந்துள்ளது. எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/3mpkOlF

Post a Comment

0 Comments