இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

CSK VS LSG: சென்னையில் நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்! https://ift.tt/Tcr16Cl

சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான டிக்கெட் விற்பானை நாளை முதல் தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 31ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதிவரை கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடைபெறவிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில், 10 அணிகள் 70 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன.

IPL 2023 online tickets booking and price list: Check how to book Indian Premier League match tickets? - CSK, MI, RCB, KKR, PBKS, SRH, DC, GT, LSG, RR | Zee Business

2023ஆம் ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டியானது, முன்னாள் சாம்பியன் அணியான சிஎஸ்கே மற்றும் டிபண்டிங் சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே 31ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. குரு மற்றும் சிஸ்யன் என அனைவராலும் பார்க்கப்படும் எம் எஸ் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் முதல் போட்டியில் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளனர்.

image

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானம் புணரமைக்கப்பட்டு முழுமையான ரசிகர்களோடு போட்டியை நடத்த தயாராகி உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 7 ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜியண்ட் அணிக்கும் இடையே ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் முதல் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

CSK vs LSG, IPL 2022 prediction today: Who will win Chennai Super Kings vs Lucknow Super Giants match? - Sports News

சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்து செய்தி வெளியிட்டுள்ள சிஎஸ்கே நிறுவனம், சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்றும், அதனை பேடிஎம், இன்சிடர் இணையதளம் மற்றும் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிக்கெட் விற்பனையை பொறுத்தவரையில் 1500 ரூபாயில் இருந்து தொடங்கி, 2000, 2500 மற்றும் 3000 என கேலரி வரிசைகளை பொறுத்து மாறுபடுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/BSjCc1G

Post a Comment

0 Comments