இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

‘அரட்டை’ பயனாளர் தகவல்களை விற்க மாட்டோம்: சோஹோ குளோபல் புராடெக்ட் தலைவர் ஜெரி உறுதி

புதுடெல்லி: சோஹோ நிறு​வனர் மற்​றும் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்​பு, இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட ‘அரட்​டை’ செயலியை முழு வீச்​சில் கொண்டு வர தீவிர​மாக இருக்​கிறார்.

இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட அரட்டை செயலி இலவச​மானது, பயன்​படுத்த எளி​தானது, பாது​காப்​பானது. சோஹோ​வால் தொடங்​கப்​பட்ட அரட்டை செயலியை வாட்ஸ் அப், டெலிகி​ராம் போல் பயன்படுத்தலாம். இந்​நிலை​யில், ‘அரட்​டை’ செயலி​யின் குளோபல் புராடெக்ட் தலை​வர் ஜெரி ஜான் முதல் முறை​யாக அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரட்டை செயலி 10 லட்​சம் வாடிக்​கை​யாளர்​களை தாண்டி விட்​டது என்ற தகவலை பகிர்ந்து கொள்​வ​தில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்​போது ‘மேட் இன் இந்​தி​யா’ தயாரிப்​பு​கள் விஷ​யத்​தில் பயனாளி​கள் மிகுந்த ஆர்​வ​மாக உள்​ளனர். ஆனால், இந்த எண்​ணத்தை நீடித்து நிலைக்க செய்​வதற்​காக எங்​கள் குழு மும்​முர​மாக பணி​யாற்றிவரு​கிறது. குறிப்​பாக தனி​யுரிமை, மதிப்பு சார்ந்த விஷ​யங்​களில் கவனம் செலுத்தி வரு​கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uFsliYa

Post a Comment

0 Comments