இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

பேசுவதை மொழிபெயர்க்கும் முதல் ஏஐ தொழில்நுட்பம்: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் உருவாக்கம்

ஜெய்ப்பூர்: பேசுவதை பேச்​சாக மொழி பெயர்க்​கும் உலகில் முதல் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தை, ஜெய்ப்​பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உரு​வாக்​கி​யுள்​ளார்.

ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ் அகர்​வால். வாராணசி பனாரஸ் இந்து பல்​கலைக்​கழக ஐஐடி மாணவர். இவர் பிக்ஸா என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறு​வனத்தை தொடங்​கி​னார். மனிதர்​கள் பேசுவதை போல் குரலை நேரடி​யாக மொழிபெயர்ப்பு செய்​யும் லூனா என்ற செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்தை இவர் உரு​வாக்​கி​யுள்​ளார். இது பேச்சு வடி​விலேயே விரை​வாக​வும், உணர்​வுபூர்​வ​மாக​வும் குரல் வடி​விலேயே மொழி பெயர்க்​கிறது. இதில் உள்ள தொழில்​நுட்ப கட்​டமைப்பு பேசும் தொனியை மாற்​ற​வும், பாட​வும் அனு​ம​திக்​கிறது. இது மனிதர்​களிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்​படுத்​துகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6G4sALJ

Post a Comment

0 Comments