இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

ஜல்லிகளை பெயர்த்த நிலையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் அவதி

முஷ்ணம், டிச. 24:   முஷ்ணம் அருகே கொழை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கொழை நிஜங்கன் நடுத்தெரு, தெற்குத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் தார்சாலை அமைக்கும் பொருட்டு கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு சாலையில் ஏற்கனவே இருந்த ஜல்லிகளை பெயர்த்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித ஆரம்ப கட்ட பணிகளும் நடைபெறவில்லை. இதனால் தெருவாசிகள் சாலைகளில் நடந்து செல்ல முடியாமலும், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்லும் போது அடிக்கடி பழுதாகி வருவதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரரிடம் பணிகளை முடிக்குமாறு தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தார்சாலை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/32vKHci

Post a Comment

0 Comments